1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (10:34 IST)

டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! – எப்படி பார்ப்பது?

TANCET
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஆர்க், எம்.டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர டான்செட் (TANCET – Tamilnadu Common Entrance Test) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வு கடந்த மே மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் முக்கியமான 14 நகரங்களில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஜூன் 30ம் தேதி வரை இந்த இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.