1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu Govt allowed shop opening 24 hours

24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி! – தமிழக அரசு அனுமதி!

TN assembly
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2020ல் கொரோனா பரவ தொடங்கியதால் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநில அரசு தளர்வுகள் அல்லது கட்டுபாடுகளை அறிவித்து வந்தது.

கொரோனா காரணமாக உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ராயல் என்பீல்ட் பைக் ஒன்று தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு