1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (13:15 IST)

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள்! – தாட்கோ (TAHDCO) விண்ணப்பம்!

Tahdco
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தாட்கோ மேற்கொண்டு வருகிறது. அவை குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்கள் பொருளாதாரரீதியாக உயர்வை அடைவதற்காக 1974ல் உருவாக்கப்பட்டதுதான் தாட்கோ (TAHDCO – Tamilnadu Adi Dravidar Housing & Development Corporation Ltd) எனப்படும் தமிழ்நாட்ய் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்.

இந்த தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் முனைவோர் கடன் என பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை பெற தாட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தாட்கோவின் தொழில் முனைவோர் கடன் வசதி மூலம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.25 வரை வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் மொத்த தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2,25,000 வரை முன் விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கும்போது இந்து ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சாதி சான்றிதழ், வருமான சான்று உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும். வருமான சான்றிதழ் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்குள்ளாக இருத்தல் வேண்டும். மேலும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு என எந்த தொழிலை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து, அதனுடன் தேவையான பிற ஆவணங்களையும் விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.