வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (07:52 IST)

தமிழகத்தில் கொரோனா: அக்டோபரில் உச்சம் – அதிர்ச்சித் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் உச்சம் அக்டோபர் மாதத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழக மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ஜுன் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த ஐசிஎம்ஆரின் அங்கமான தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் ஜூன் மாத இறுதியிலேயே உச்சம் எட்டப்பட்டு அதாவது 3.5 கோடி பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதனால் எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.