திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (22:13 IST)

குடிநீரில் கலந்த எண்ணெய் ...மக்கள் வாந்தி, மயக்கம் !

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரத்தில்   ஒ.என்.ஜி .சி  என்ற  எண்ணெய் சேகரிக்கும் மையம் உள்ளது.

இந்த எண்ணெய் சேகரிக்கும் மையத்திற்கு எதிர்புறம் ன்ராமாகிருதம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு மேல் நிலை குடி நீர் தேக்க தொட்டியில் இரு ந்து தண்ணீர்
விநியோகம் செய்யப்படுகிறது.

இன்று இந்தத் தண்ணீர் குடித்த தெருவில் உள்ள மக்களுக்கு  வயிற்று வாலி ஏற்பட்டு சில மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை  குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு சிறுவனை மேல் சிகிச்சைக்கான மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குத்தாலம் தாசில்தார் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்தத் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.