தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: எங்கே மழை பெய்யும்?
கோடைகாலமான மே மாதம் தொடங்கியுள்ள நிலையில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாதம் இந்தியாவில் பரவலாக கோடைக்காலமாக அறியப்படுகிறது. இந்த கோடைக்காலங்களில் வெப்ப சலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதனால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபகற்பத்தில் சில பகுதிகளில் மிதமான அளவில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.