திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (10:45 IST)

மீண்டும் ஒரு பேரிடரை எதிர்கொள்ள தயாரா? – கமல்ஹாசன் கோரிக்கை!

தமிழகத்தில் பருவ மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழையின் போது ஏற்படும் புயல், சூறைக்காற்று உள்ளிட்ட பேரிடர்களால் மக்களும், மீனவர்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பருவ மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் பேரிடர் காலத்திற்கு ஏற்றார்போல மக்களும், அரசும் தயாராக வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக ஓகி புயலில் தென் தமிழக மீனவர்கள் கடலில் மாயமானது, கஜா புயலால் படகுகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவை சேதமடைந்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ள கமல்ஹாசன் பேரிடரை எதிர்கொள்ள 9 கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளார்.
அதன்படி,
  1. பழவேற்காடு முதல் நீரோடி வரை கடல்நீர் புகுவதை தடுக்க ஆறு மூலை கான்கிரீட் போட வேண்டும்.
  2. கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு சேட்டிலைட் போனுக்கு பதிலாக ரேடியோ போன் வழங்க வேண்டும்
  3. அனைத்து மீனவர்களுக்கும் அரசே மிதவை கவசங்கள் வழங்க வேண்டும்
  4. ஆழ்கடல் மீனவர்களை தொடர்பு கொள்ள வசதியாக சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் அமைக்க வேண்டும்.
  5. தமிழகத்தின் அனைத்து துறைமுக பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுக்கள், ஹெலிகாப்டர், படகுகள் தயாராக இருக்க வேண்டும்.
  6. மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலில் ஆம்புலன்ஸ் படகு அமைக்க வேண்டும்.
  7. மீனவ படகுகள் பழுதானால் இழுத்துவர விசைப்படகுகள்
  8. மீனவர்களின் சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டும்
  9. கடற்படையில் மீட்பு பணிகளில் மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு
ஆகியவற்றை அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.