6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.