1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances today

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதவிர ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டுரையில்
19.44 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!