திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (11:08 IST)

மாஸ்டர் செஃப் புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  உள்ளார். இந்நிகழ்ச்சிக்கா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவும் உள்ளது.