பாஜகவின் நீட் கேஸை தள்ளுபடி பண்ணனும்! – மாணவி நீதிமன்றத்தில் மனு!
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் பாதிப்புகளை ஆராய தமிழக அரசு நீட் ஆய்வு குழுவை அமைத்தது.
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல், அதன் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக மனுவில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தினி என்ற மாணவி மனு அளித்துள்ளார். அதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருதிதான் தமிழக அரசு குழு அமைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.