திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (13:13 IST)

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்கள்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணம் செய்த மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ஒரு மருத்துவர். இவரது மனைவி அம்புஜா. இவரும் மருத்துவர். மருத்துவ தம்பதியினர் சென்னைக்கு வேலை விஷயமாக சென்று பின்னர் பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை பெங்களூரை சேர்ந்த பைசு என்பவர் ஓட்டிச் சென்றார்.
 
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சூளகிரி என்ற இடத்தில் அவர்கள் சென்ற கார் கட்டுப்பாடை இழந்து முன்னால் சென்ற லாரி மீதி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ராமச்சந்திரன், அம்புஜா, கார் டிரைவர் பைசு ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.