வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (10:50 IST)

பணக்கார பெண்களே என் டார்கெட் - மோசடி காதல் மன்னன் வாக்குமூலம்

பணக்கார பெண்களை குறி வைத்து திருமணம் செய்து அவர்களிடம் பண மோசடி செய்ததாக  பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன் புருஷோத்தமன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
கோவையை சேர்ந்த புருஷோத்தமன் என்ற 57 வயது நபர், பணக்கார விதவை பெண்களை தேர்வு செய்து அவர்களிடம் நல்லவர் போல் நடித்து இரண்டாம் திருமணம் செய்து, பின்னர் அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார். போலீசாரிடம் சிக்கியுள்ள அவரிடம்  இதுவரை 8 பெண்கள் ஏமாந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த கணக்கு அதிகரித்து கொண்டே வருகிறது.
 
புருஷோத்தமனிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 11 பெண்கள் அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், இன்னும் சிலர் புகார் கொடுக்க தயங்குவதால் இவருடைய ஏமாற்று திருமணத்தின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தினர் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
போலீசாருக்கு புருஷோத்தமன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
 
இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பும் பணக்கார பெண்களே என் டார்கெட். அவர்களிடம் நான் ஒரு தொழிலதிபர் போல காட்டிக்கொள்வேன். எனக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தினர் என்னைப் பற்றி கூறுவதை நம்பி பெண் வீட்டார் என்னை தொடர்பு கொள்வார்கள்.
 
அதன் பின் அவர்களிடம் நேரில் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பேன். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணம் கேட்டு தொந்தரவு செய்வேன். அதன் பின் பணத்தை பெற்று கம்பி நீட்டி விடுவேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இதுவரை 11 பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.