புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (11:28 IST)

அரசியல்வாதிகளை குறிவைக்கும் கொரோனா! – பொள்ளாச்சி ஜெயராமன், குண்டு ராவ் பாதிப்பு!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனாவால் தற்போது தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக இருந்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கொரோனாவால் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் பாதிக்கப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக எம்.பி.வசந்தகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவிற்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ் தினேஷ் குண்டு ராவுடன் தொடர்பில் இருந்த கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.