1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:40 IST)

இன்றைய உலக கொரோனா: பாதிப்பு, குணமானோர் எண்ணிக்கை

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,055,037 எனவும், இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 998,721 எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,406,122 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,650,194 ஆகும் 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 88 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடம் 
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 7,287,561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 209,177 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,524,108 குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் 5,990,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 94,534 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,938,688 குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் 4,718,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 141,441பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 4,050,837 குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது