ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:40 IST)

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே பல விஐபிக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பாஜக தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது
 
இதனை அடுத்து உமாபாரதி தனது டுவிட்டரில் தன்னை சார்ந்தவர்கள் கொரனோ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். வந்தே மாதரம் கஞ்ச்-இல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் நான்கு நாட்கள் கழித்து இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமி ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.