வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (10:48 IST)

மீண்டும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! – தளர்வுகள் என்ன? தடைகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில் அடுத்த மாதம் இறுதிவரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் ஊரடங்கு இருந்து வருகிறது. மாதம்தோறும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட 9 மணி வரையிலும் பார்சல் வாங்க 10 மணி வரையிலும் அனுமதி

திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம்

தினந்தோறும் வெளிமாநில விமானங்கள் 50 வரை மாநிலத்திற்குள் வர அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை 100 ஆக உயர்வு

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி

இவைத்தவிர தற்போது உள்ளபடியே பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறப்பதற்கான தடை, புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை ஆகியவை தொடரும்.