தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? புதிய கட்டுப்பாடுகள்! – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போதைய ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள், கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற செய்தல், இல்லாவிட்டால் அபராதம் விதித்தல் போன்றவற்றையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் கொரோனா இரண்டாம் அலை கைமீறி விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் போன்றவற்றை மூடுதல், இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்துதல் குறித்தும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.