வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:06 IST)

மன்னிப்புக் கேட்ட கணவர்… போலிஸ் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகை ராதா தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ராதா அவரின் முதல் திருமணம் தோல்வியில் முடியவே இரண்டாவதாக  காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கணவர் அடித்து துன்புறுத்துவதாக ராதா புகாரளித்து பரபரப்பை கிளப்பினார்.

இதையடுத்து வசந்தராஜா, ராதாவிடம் மன்னிப்புக் கேட்டதை அடுத்து தான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.