வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:00 IST)

வாக்கு எண்ணும் மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம்! – தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்!

தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் மே 2ல் நடைபெற உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவுகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பதாக திமுகவினர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் புகார் மனு அளித்த நிலையில் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.