வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (09:51 IST)

தமிழகம் தான் நம்பர் ஒன் ஊழல் மாநிலம் - பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா

இந்தியாவிலே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் தான் என நேற்று சென்னையில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் நேற்று அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார்.
 
இந்நிலையில் கோ பேக் அமித்ஷா (அமித்ஷா திரும்பிப் போ) என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் டிரெண்டிங்கானது.
 
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஆவேசமாக பேசிய அமித்ஷா, இந்தியாவிலே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றார். தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்தும் ஒழிக்கப்படும் என்றார்.
 
ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் என்னை பலர் கேலியும், கிண்டலும் செய்கின்றனர். எங்களின் பலத்தை வரும் தேர்தலில் பார்ப்பீர்கள் என அமித்ஷா தெரிவித்தார்.