1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay going to madurai soon

செப்டம்பர் 28ம் தேதி மதுரைக்கு போகும் முதல்வர் விஜய்!..

vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.

தவெக கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்
. தேர்தலுக்கு முன்பு தவெக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும் ஒன்று. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அந்த திட்டம் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை
.
இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில்தான், வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி மதுரை செல்லும் முதலமைச்சர் விஜய் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கவிருக்கிறார். மேலும், காந்தி அருங்காட்சியத்தை திறந்து வைக்கும் விஜய் அதன்பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனமும் செய்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
AI - யால் 100 கோடி பேர் இறந்து போவாங்க!.. பீதி கிளப்பும் பில் கேட்ஸ்..