வீரமணி வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு!.. தமிழக அரசு அதிரடி!..
கடந்த பல வருடங்களாகவே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு உடனடியாக இருந்த சாந்தி, மகேந்திரன் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று வீரமணி தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியாகி பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோ தொடர்பான செய்திகளை வடமாநில ஊடகங்களும் நேற்று வெளியிட்டன..
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அருண், ஐபிஎஸ், கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், வீரமணியின் போக்சோ வழக்கு தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் விசாரித்த கோயம்பேடு சரக உதவி காவல் ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. சென்னை காவல் துறை கூடுதல் ஆணையாக உள்ள ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதில் டிஐஜி திஷா மிட்டால், மற்றும் எஸ்பி அந்தஸ்தில் உள்ள முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோரும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.