1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have red alert in 13 districts

வெளுக்க போகும் கனமழை; 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Tamilnadu
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புள்ள நிலையில் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 8ம் தேதி வாக்கில் புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு டிசம்பர் 8ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K
அடுத்த கட்டுரையில்
விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி