தொடர்புடைய செய்திகள்
- இன்று எங்கெங்கு மழை – முழு விவரம்!
- அப்பா கையால் உதயநிதிக்கு விருது!.. மேடையில் சிவகார்த்திகேயன் மகள்! – செஸ் ஒலிம்பியாட் Highlights!
- சினிமாவ விட இது வித்தியாசமா இருந்துச்சு.. எனக்கு இது புதுசு! – செஸ் ஒலிம்பியாட் குறித்து விக்னேஷ் சிவன்!
- இந்தியர்களுக்கு சிறப்பு ராமாயண சுற்றுலா ரயில்! – பக்கா ப்ளான் போட்ட இலங்கை!
- அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படாது - பள்ளிக் கல்வித்துறை
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
இன்று தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
