தொடர்புடைய செய்திகள்
- ரஜினி – கவர்னர் சந்திப்பில் தவறு என்ன? அண்ணாமலை!
- செஸ் ஒலிம்பியாட் – வெண்கலம் வென்றோருக்கு தலா ரூ.1 கோடி பரிச!
- சினிமாவ விட இது வித்தியாசமா இருந்துச்சு.. எனக்கு இது புதுசு! – செஸ் ஒலிம்பியாட் குறித்து விக்னேஷ் சிவன்!
- 1000க்கும் குறைந்தது இன்றைய கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை
இன்று எங்கெங்கு மழை – முழு விவரம்!
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
காற்று திசை வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதோடு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
