வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மே 2020 (09:18 IST)

எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட தமிழகம்! – போக்குவரத்து நடைமுறைகள் என்ன?

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதிக்காக தமிழகம் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் அளிக்கப்படும் தளர்வுகள் குறித்தும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. போக்குவரத்து வசதிக்காக தமிழகம் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் மண்டலம் – கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல்

2ம் மண்டலம் – தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

3ம் மண்டலம் – விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

4ம் மண்டலம் – நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்

5ம் மண்டலம் – திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

6ம் மண்டலம் – தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாக்குமரி

7ம் மண்டலம் – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்

8ம் மண்டலம் – சென்னை காவல் சராகத்திற்கு உட்பட்ட பகுதிகள்

இந்த மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஊரிலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு உட்பட்ட ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் அரசிடம் இ-பாஸ் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதேசமயம் குறிப்பிட்ட மண்டலத்திற்குள் இருக்கும் ஊர்களிடையே பயணிக்க இ-பாஸ் அனுமதி தேவையில்லை. மேற்கண்ட மண்டலங்களில் 7 மற்றும் 8ம் மண்டலங்களில் போக்குவரத்து தடை தொடர்கிறது. இவை தவிர 1 முதல் 6 மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.