திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 30 மே 2020 (20:02 IST)

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தடைசெய்யபட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள்,வணிக வளாகங்கள் இயங்குவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளது.

அதில், ஜூன் 8 முதல் இயங்க அனுமதிக்கப்பட்டவை :

பள்ளிகள் , கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  பெற்றோர் ஓப்புக்கொண்டால் ஜூலை மாதம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை எனவும் இ - பாஸ் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
 
 
தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிபக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தளர்வில் எதற்கெல்லாம் தடை;

65 வயது வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயது குறைவான சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது  எனவும்,  இரவு 9 பது மணிமுதல் அதிகாலை 5 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.