மெட்ரிக் பள்ளிகளுக்குப் போட்டியாகும் ’தமிழக அரசு பள்ளிகள் ’...
தமிழகத்தில் அரசு அங்கன் வாடி பள்ளிகளில் எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
பொதுவாக நம் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில்தான் எல்கேஜி , யுகேஜி பள்ளிகள் உள்ளன, ஆங்கிலம் பரவிக்கொண்டுள்ள இக்காலத்தில் தமிழ்வழி படிக்கும் மாணவர்களும் கல்வி, வேலைவாயுப்பில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்கும் வண்ணம் தமிழக அரசு சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன் முதலாக பள்ளி கல்வித்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
இதில் தமிழக துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜூ போன்றோர் கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.
தமிழகத்தீல் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள அங்கன் வாடி மையங்களில் பள்ளிக்கல்வித்துறை சமுக நலம், மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.இதன் மூலம் 52,932 குழந்தைகள் பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன.