வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (16:11 IST)

இத்தன கோடி சொத்து இருக்கும் போது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ன?

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசம் குறித்து பேட்டி அளித்தார். அவ்வப்போது தமிழகத்தில் நடக்கும் சில சர்ச்சையான செய்திகளுக்கு தனது கருத்தையும் வெளியிட்டு வருகிறார். ஆனால், அவரது அரசியல் கட்சி குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 
 
ரஜினி கமல் என இருவரும் அரசியலில் நுழைந்திருந்தாலும், ரஜினிக்கான எதிர்ப்பே அதிகமாக உள்ளது. ஏன் என்றால் ரஜினி பாஜகவிற்கு துணை நிற்பவர் என்ற பரவலான செய்தி இருந்து வருகிறது. 
 
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்க்கும் பலர் ரஜினிக்கு வயதாகிவிட்டது, எனவே மீதமுல்ல வாழ்நாளுக்கு சம்பாதிப்பதற்காவே அரசியலில் நுழைகிறார் என்ற விமர்சனக்களையும் முன்வைக்கின்றனர். 
இந்நிலையில் ரஜினியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு ரூ.360 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அவர் ஒரு படத்தில் நடிக்க சராசரியாக ரூ.65 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. 
 
ரஜினியின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது, அதே நேரம் நடித்த படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினை ரஜினி திருப்பி கொடுத்துவிடுவாராம். 
ரஜினி விளம்பரங்களில் நடிப்பதில்லை. எனவே, அவரின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை கணக்கில் வைத்துத்துக்கொண்டு கணக்கிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ரஜினிக்கு அரசியல் பயணம் எப்படி இருக்கும் என தெரியாவிட்டாலும், இன்று வரை அவரது சினிமா பயணம் சிறப்பாகவே உள்ளது. அரசியலில் தவறினாலும், சினிமாவில் ரஜினி தவறவில்லை. என்றும் அவரே சூப்பர் ஸ்டார். இனியும் அவர் அரசியலுக்கு வந்து சம்பாதிக்க வேண்க்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. மக்களுக்கான சேவை நோக்கத்தில் அவர் அரசியலில் ஈடுபடலாம்.