1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (23:12 IST)

அரசு பேருந்தில் 'பேட்ட' திரைப்படம்: அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஒருசில இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. இதனை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும் மெளனமாக உள்ளது.

இந்த நிலையில் கரூரில் இருந்து சென்னை வந்த பேருந்து ஒன்றில் 'பேட்ட' திரைப்படம் திருட்டு டிவிடியில் இருந்து ஒளிபரப்பப்பட்டதாக ஆதாரத்துடன் கூடிய புகார் ஒன்றை ரஜினி ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்,. தனியார் பேருந்துகள் இதுபோன்ற தவறை செய்தால் அரசு தட்டி கேட்கலாம். ஆனால் அரசு பேருந்திலேயே இதுபோன்ற ஒரு தவறு நடந்தால் அதனை யார் தட்டி கேட்பது என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது