செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (10:58 IST)

மார்ச் 22 முதல் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்த நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல், லாரி வாடகையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 22 முதல் 31ம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.