தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? – தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 8 மணியளவில் தொடங்க உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருந்தாலும், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் பெரும்பான்மை பெரும்? ஆட்சியை பிடிப்பது யார்? என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் 11 மணிக்கு பெரும்பான்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவார்ஸ்யமான தேர்தல் செய்திகளுக்கு வெப்துனியாவோடு இணைந்திருங்கள்…