அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்?
தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.