வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (15:05 IST)

தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை மழை!

தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என முன்னர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பின்னர் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.