தமிழகத்தை அதிகம் பாதித்த டெல்டா கொரோனா வைரஸ்! – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலில் அதிக அளவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் பரவ இந்தியாவில் உறுமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸே காரணம் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 554 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 386 பேருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்துள்ளது. மொத்த பரிசோதனையில் இது 75%க்கும் அதிகம் என்றும், இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.