திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (12:43 IST)

பயிற்சி வகுப்பு நடத்தி கொரோனா நிதி திரட்டிய இயக்குனர் சுசீந்திரன்! – உதயநிதியிடம் வழங்கினார்!

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தி நிதி திரட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் இருந்து வரும் நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு பலரும் நிதியளித்து வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெண்ணிலா கபடி குழு, ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் ஆன்லைன் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தி கொரோனா நிதியாக ரூ.5 லட்சம் திரட்டியுள்ளார். இந்த தொகையை இன்று திமுக இளைஞர் அணி செயலாளரும், திமுக எம்.எல்.ஏவுமான உதயநிதியிடம் சுசீந்திரன் வழங்கினார்.