திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (11:42 IST)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 38 ஆக இருந்த நிலையில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கும், காட்பாடியை சேர்ந்த 49 வயதான நபருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.கும்பகோணத்தை சேர்ந்த நபர் சமீபத்தில்தான் மேற்கிந்திய தீவுகளில் இருந்து வந்துள்ளார்.

இருவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.