செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (11:08 IST)

இந்தியாவில் கொரொனா Stage 3? ஆபத்து உணரப்படுமா..???

இந்தியாவில் கொரோனா பரவல் 3 கட்டத்தை எட்டவுள்ளது என மக்களிடையே பீதி கிளம்பியுள்ளது. 

 
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  
 
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் கொரோனா பாதிப்பு 3 ஆம் கட்டத்தை எட்டிவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
சிலரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் பரவல் குறித்த பீதி அதிகரித்துள்ளது. கொரோனா 3 ஆம் கட்டத்தை எட்டினால் விளைவுகள் அதிகப்படியாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இந்த பயத்தின் வெளிபாடாக #Stage3 என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
கொரோனாவின் நான்கு கட்ட பரவல்: 
1. இறக்குமதி பரவல்: 
கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது. 
2. உள்நாட்டு பரவல்: 
வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது.  
3. சமூக பரவல்: 
உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது. 
4. தொற்றுநோய் பரவல்: 
எங்கு யார் மூலமாகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் தீவிரமாகப் பரவுவது.