செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (19:22 IST)

சித்தார்த்தா இறந்ததற்கு இவர்கள்தான் காரணம்?- பரபரப்பை கிளப்பும் கார்த்திக் சிதம்பரம்

கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதற்கு அரசு அமைப்புகளின் அழுத்தமே காரணம் என கார்த்திக் சிதம்பரம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கஃபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தா. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் மாயமான இவர் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்டார். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. அவரது 20 அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ஏற்கனவே சோதனை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி அஞ்சலி இன்று மாலை நடைபெற்றது.

இந்நிலையில் சித்தார்த்தாவின் மரணம் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் “அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற தொழில்முனைவோர்கள் மீது வரி என்ற பெயரில் அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் தொழில்முனைவோரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. இவர்களின் அழுத்தமே இன்று சித்தார்த்தா இறக்க காரணமாகிவிட்டது. இது உடனடியாக கண்டிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.