அடுத்தடுத்து இறந்த பக்தர்கள் – சதுரகிரியில் பரிதாபம்

sathuragiri
Last Modified வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:48 IST)
சதுரகிரிக்கு புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் அடுத்தடுத்து இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள புனித ஸ்தலங்களில் முக்கியமான ஒன்று மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள சதுரகிரி. தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதியில் சுந்தரமகாலிங்கம் திருத்தலம் உள்ளது. ஆடி அமாவாசைக்கு சதுரகிரிக்கு பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர்.

அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால் பலருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் சதுரகிரிக்கு சென்றோரில் 4 பேர் மாரடைப்பு, மூச்சு திணறல் ஆகியவற்றால் இறந்துள்ளனர். இது பக்தி பயணம் மேற்கொள்வோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :