புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:52 IST)

விபத்தில் மரணமடைவோருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு

தமிழக பட்ஜெட்டில் விபத்தில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் விபத்தில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் இயற்கை மரணங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தரப்படும் இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.