1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (08:40 IST)

டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் காற்று மாசு??

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. காற்று மாசு கட்டுபடுத்த டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிகரித்துவரும் காற்று மாசால், டெல்லி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் செல்வோர்கள் முகத்தை துணிகளால் மூடிக்கொண்டே செல்கின்றனர்.

காற்று மாசால் டெல்லி பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை போல தமிழ்நாட்டிலும் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் “டெல்லியையும் வட இந்தியாவையும் கடந்த ஒரு வாரமாக வாட்டிக்கொண்டிருக்கும் காசு மாற்று தமிழகம் உட்பட கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கு அடுத்த வாரத்திற்குள் பரவும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.