வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (10:22 IST)

பால் பொங்கும் ஒகே; பச்ச தண்ணி எப்படி பொங்கும்... தமிழிசைக்கு நக்கல் பதிலடிகள்!

தமிழிசை போட்ட டிவிட் ஒன்றால் அவர் டிவிட்டர் வாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். 
 
பாஜக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சத்தமில்லாமல் ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பஜக ஆட்சி அமைத்த நிலையில் இப்போது திரிபுராவிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. 
 
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வலையில் தமிழக பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒரு குழுவாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு திரிபுராவின் வெற்றிக் கதையே மிகப் பெரிய சாட்சி. 
இந்த வெற்றி நாளை தமிழகத்திலும் எதிரொலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதிவை கண்ட தமிழக மக்கள் பலர் கடுப்பாகி, பால் பொங்கும், பச்ச தண்ணி எப்படி பொங்கும். அது போலதான் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என கமெண்ட் செய்து வருகின்றனர்.