செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (18:04 IST)

உன்னாவ் பாலியல் விவகாரம் ! எங்களுக்கும் ஆபத்து ஏற்படுமா ? மாணவி போலீஸிடம் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் அவருடைய வழக்கறிஞரும் காயமடைந்துள்ளார். இது தற்செயலான விபத்தா? அல்லது சதியா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் என்பவர் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை சுமத்திய அடுத்த நாளே அவருடைய தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்தப் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். அவருடன் சென்ற இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். தற்போது பாதிக்கப்பட்ட அப்பெண் சுயநிலைவில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.
 
 
 
இதனைத்தொடர்ந்து , இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி கூறியதாவது :
 
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் மீது காரை மோதி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வதை தட்டிக் கேட்டால், எங்கள் உயிருக்கும் இதுபோன்று ஆபத்து ஏற்படுமா என்று ஒரு பள்ளி மாணவி காவல்துறை அதிகாரியிடன் கேள்வி எழுப்பினார். இது அந்த மாணவியின் கேள்வி மட்டுமல்ல உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.