1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (10:20 IST)

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்.. அதிகாரிகள் மீது தமிழிசை குற்றச்சாட்டு..!

பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது, வருத்தம் அளிக்கிறது என்றும், மறுக்கப்பட்ட வாக்குரிமை குறித்து அதிகாரிகள் சரியாக கவனித்து இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
வாக்குரிமை மறுப்பு குறித்துஅதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் சொல்வது வருத்தத்தை அளிக்கிறது என்றும், "கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் கண்காணித்து இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில் ஏராளமான வாக்காளர்களுக்கு வாக்கு இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. நடிகர் சூரி போன்ற பிரபலங்களுக்கு கூட வாக்கு இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். 
 
தனது தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அதே குற்றச்சாட்டை தான் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழிசை சௌந்தரராஜனின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன பதில் கூற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran