வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:20 IST)

தமிழிசை ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ.. திமுக சதி என குற்றச்சாட்டு..!

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மக்களுடன் ஜூம் மீட்டிங்கில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு வாக்கு கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அதில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதாகவும் இது திமுகவின் சதி என்றும் பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

தென் சென்னை பாஜக போட்டியாளரான தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு அடுக்குமாடி வீடுகளுக்கான ஏறி இறங்கி செல்ல முடியாது என்பதால் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஜூம் மீட்டிங்கில் தமிழிசை கலந்து கொண்டிருந்த போது திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் ஜூம் இணைப்பை கட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன் நான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு கேட்கக் கூடாது என்பதற்காக திமுகவினர் செய்த சதி தான் இது என்று குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran