1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (14:11 IST)

வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது...! தமிழிசை சௌந்தர்ராஜன்..!!

Tamilasai
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான் என்றார்.
 
தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்பதை ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார். பிரச்சனை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சுமுகமாக நடத்தி உள்ளதற்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
 
பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது என்றும் வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

 
இதனிடையே தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் மனு அளித்துள்ளார். தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.