திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (11:28 IST)

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை நம்பிக்கை !

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து விரைவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரும் என தமிழிசை தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘ கனிமொழி தனது கணவர், தனது மகன் மற்றும் அவரின் வருவாய் மற்றும் வசிப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை மறைத்துள்ளார். இவைக் குறித்தும் தேர்தலில் விதிகள் நடைமீறல்கள் குறித்தும் நான் வழக்கு தொடுத்துள்ளேன். விசாரணையின் முடிவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் வரலாம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.