செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (10:40 IST)

”ஒருவேளை நான் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும்”…அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்று வெளியேறிய நிலையில், தான் நேற்றைய போட்டியில் விளையாடி இருந்தால் இந்தியா வென்றிருக்கும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் மோதியதில் கடும் தோல்வியடைந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது.

இதனை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியடைந்தது போல், இந்தியா அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றும், ஒரு வேளை நேற்றைய போட்டியில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும் எனவும் கூறினார்.

மேலும் அவர், எதிர்காலத்தில் அதிமுக வெற்றி பெறும்போது, இந்திய அணியும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.